×

சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு முத்துப்பேட்டை எடையூரில் முதலுதவி, பேரிடர் மேலாண்மை பயிற்சி


முத்துப்பேட்டை,பிப். 11: முத்துப்பேட்டை அடுத்த எடையூரில் முதல் உதவி மற்றும் பேரிடர் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது. முத்துப்பேட்டை அடுத்த எடையூர் பாரதமாதா ஆதரவற்ற பெண்கள் இல்லத்தில் இண்டியன் ரெட் கிராஸ் சொசைட்டி, பாரதமாதா சேவை நிறுவனங்கள், ஜேசீஸ் சங்கம் இணைந்து முதல் உதவி மற்றும் பேரிடர் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாரதமாதா தொண்டு நிறுவன தலைவர் எடையூர் மணிமாறன் தலைமை வகித்தார். அரசு பள்ளி பள்ளி வளர்ச்சிக்குழு பொறுப்பாளர் நாகராஜன் முன்னிலை வகித்தார்.

பயிற்சியை எடையூர் ஊராட்சி மன்றத் தலைவர் கணேஷ்குமார் தொடங்கி வைத்து பேசினார். இதில் உதவி மற்றும் பேரிடர் மேலாண்மை மாநில பயிற்றுனர் துளசிதுரை மாணிக்கம் கலந்து கொண்டு விபத்து காலங்களில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் செயல் முறைகள், கியாஸ் சிலிண்டர் தீ பிடித்தால் உடனே செய்ய வேண்டிய தடுப்பு முறைகள், புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றும் முறைகள் மற்றும் தீ அணைக்கும் கருவியினை எவ்வாறு முறையாக கையாளுவது என்பது குறித்தும் செயல் முறைகளை செய்து காட்டி பயிற்சி அளித்தார். இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பாரதமாதா ஆதரவற்ற பெண்கள் இல்ல பயனாளிகள், ஆற்றுப்படுத்துனர்கள், காப்பாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர். முன்னதாக ஜேசீஸ் சங்க செயலாளர் சாந்தி வரவேற்று பேசினார்.

Tags :
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு