×

ஆழ்வார்குறிச்சியில் பரபரப்பு அரசு நிகழ்ச்சியில் மக்கள் பிரதிநிதிகளை புறக்கணிப்பதா?

கடையம், பிப். 11: ஆழ்வார்குறிச்சியில் அரசு நிகழ்ச்சியில் மக்கள் பிரதிநிதிகளை புறக்கணித்ததால் பூங்கோதை எம்எல்ஏ மற்றும் திமுகவினர் பேரூராட்சியை முற்றுகையிட்டவர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.ஆழ்வார்குறிச்சியில் சுமார் ரூ 2 கோடிக்கு மேல் மதிப்பில் சாலை பணிகளை தொடங்கி வைக்க மக்கள் பிரதிநிதிகளை அழைக்காமல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதனை கண்ட ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை, ஆழ்வை முன்னாள் நகர செயலர் அல்லாபிச்சை, துணை செயலாளர் சகுந்தலா, ஒன்றிய இளைஞரணி செயலாளர் தங்கராஜா, ஆர்எஸ் பாண்டியன், ஒன்றிய பிரதிநிதி கோதர்ஷா, முன்னாள் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் முத்துக்குமார், பொதுக்குழு உறுப்பினர் சக்தி, அத்ரி ஆறுமுகம், செல்வம் மற்றும் கழக நிர்வாகிகள் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.இது அரசு நிகழ்ச்சி, நான் தலைமை செயலகத்தில் ஒவ்வொரு துறையாக அலைந்து மக்களுக்கு இந்த பணிகளை பெற்று தந்தேன். ஆனால் சட்டமன்ற உறுப்பினராகிய என்னையும், நாடாளுமன்ற உறுப்பினரான ஞானதிரவியத்தையும் ஏன் அழைக்கவில்லை என எம்எல்ஏ பூங்கோதை கேள்வி எழுப்பினார். இதனால் அங்கு திரண்ட அதிமுகவினருக்கும் திமுகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆழ்வார்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர்கள் காஜாமுகைதீன், இருளப்பன், எஸ்பி தனிபிரிவு ஏட்டு முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர். தகவலறிந்த அங்கு வந்த முன்னாள் எம்பியும் மாவட்ட செயலாளருமான பிரபாகரன்,  பூங்கோதை எம்எல்ஏவிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நீங்கள் மக்கள் பிரதிநிதி வாருங்கள், சேர்ந்து பணியை தொடங்கி வைப்போம் என்றார். இதனையடுத்து ஆழ்வார்குறிச்சியில் தேர் ரத வீதியில் சாலை அமைக்கும் பணியை பிரபாகரன் மற்றும் எம்எல்ஏ பூங்கோதை ஆகியோர் சேர்ந்து தொடங்கி வைத்தனர்.

Tags : representatives ,
× RELATED அனைத்து கட்சி பிரதிநிதிகள் கூட்டம்