×

கும்பகோணத்தில் 13ம்தேதி மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

கும்பகோணம், பிப்.11: கும்பகோணத்தில் வருகிற 13ம்தேதி மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கும்பகோணம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் வருகிற 13 ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது. தஞ்சாவூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சங்கரன் மேற்பார்வையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில், கும்பகோணம் நகரம், கும்பகோணம் புறநகர், பாபநாசம், கபிஸ்தலம், அய்யம்பேட்டை, திருக்கருக்காவூர், கணபதிஅக்ரஹாரம் பிரிவு அலுவலகம் பகுதியினைச் சார்ந்த மின் நுகர்வோர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் நேரில் வந்து தெரிவிக்கலாம் என உதவி செயற்பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.

Tags : Minority Electricity Meeting ,Kumbakonam ,
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...