×

எவரெஸ்ட் ஐடிஐயில் வேலைவாய்ப்பு முகாம்

கடையநல்லூர், பிப். 11:  கடையநல்லூர் எவரெஸ்ட் தொழிற்பயிற்சி நிலையத்தில் லஷ்மி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனம், லஷ்மி பிரிசிஷன் டூல்ஸ் லிமிடெட், லக்ஷ்மி எலக்ட்ரிகல் டிரைவ் கண்ட்ரோல் சிஸ்டம்ஸ் லிமிடெட், லட்சுமி எலக்ட்ரிக்கல் டிரைவர் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு கேம்பஸ் இண்டர்வியூ  நடந்தது.நிகழ்ச்சிக்கு  எவரெஸ்ட் தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வர் முகைதீன் அப்துல் காதர் தலைமை வகித்தார். இந்த கேம்பஸ் இன்டர்வியூக்கான நேர்முக தேர்வை லஷ்மி மெஷின் ஒர்க்ஸ் மனிதவள மேலாளர்கள் பன்னீர் செல்வம் மற்றும் சிவக்குமார் நடத்தினர். இந்த கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வான மாணவர்களுக்கு எவரெஸ்ட் தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வர்  முகைதீன் அப்துல் காதர்  பணி நியமன ஆணையை வழங்கினார். ஏற்பாடுகளை எவரெஸ்ட் தொழிற்பயிற்சி நிலையத்தின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி அலுவலர் மாரிக்குமார்,   மேலாளர்கள் மகேஷ்வரன், சரவணன், பயிற்சியாளர்கள்  நவநீதகிருஷ்ணன், செந்தூர் பாண்டியன், வெங்கடாசலம் மற்றும் மக்தூம் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags : Employment Camp ,Everest ITI ,
× RELATED கொரோனா எதிரொலி வேலைவாய்ப்பு முகாம் தேதி மாற்றம்