×

பட்டுக்கோட்டை சிறுவன் கொரோனா வைரஸ் குறித்து ஸ்கேட்டிங் மூலம் விழிப்புணர்வு கின்னஸ் சாதனை முயற்சி

பட்டுக்கோட்டை, பிப்.11: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த நாட்டுச்சாலை கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் நடராஜன் - சங்கீதா ஆகியோரின் மகன் நலன்ராஜன் (5). எல்.கே.ஜி. படித்து வருகிறான். மாணவன் தற்போது சீனாவில் உருவாகி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் கின்னஸ் சாதனை முயற்சியாக சாலையில் 40 நிமிடத்தில் 10 கிலோ மீட்டர் தூரம் ஸ்கேட்டிங் செய்து சாதனை புரிந்தார்.
வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்திலிருந்து நலன்ராஜன் ஸ்கேட்டிங்கை லாரல் கல்வி நிறுவனங்களின் தாளாளர் பாலசுப்ரமணியன் கொடியசைத்து துவக்கி வைத்தார். தளிக்கோட்டை, நாட்டுச்சாலை, ஆத்திக்கோட்டை , வளவன்புரம் பைபாஸ் வழியாக பாளையத்தில் உள்ள அஞ்சா நெஞ்சன் அழகிரி மணிமண்டபத்தில் நிறைவு செய்தார். இது 10 கி.மீ தூரம் ஆகும். இதனை 40 நிமிடத்தில் கடந்தார். இதன் மூலம் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்க்கு முயற்சி மேற்கொண்டுள்ளார்.

அப்போது நலன்ராஜனை வழிநெடுகிலும் சாலையின் இருபுறங்களிலும் பொதுமக்கள் கைதட்டி உற்சாக வரவேற்றனர். இதனை தொடர்ந்து நடந்த விழாவில் பட்டுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் ஜெயபால் மாணவனை பாராட்டி, பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார். இது குறித்து 5 வயது மாணவர் நலன்ராஜன் கூறுகையில், ‘நான் 3 வயதிலிருந்து ஸ்கேட்டிங் மாஸ்டர் நாத் மூலமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். இப்போது இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்க்கு முயற்சி மேற்கொண்டுள்ளேன். தொடர்ந்து நிச்சயம் கின்னஸ் சாதனை புரிவேன்’ என்றார்.

Tags :
× RELATED திருக்காட்டுப்பள்ளி முருகன் கோயிலில் திருக்கல்யாணம்