×

பாராக மாறி வரும் சிதம்பரம் பஸ் நிலையம்

சிதம்பரம், பிப். 11:  சுற்றுலா தலமான சிதம்பரத்திற்கு தினந்தோறும் வெளியூர்களிலிருந்து வரும் பயணிகள் அதிகம். இவர்கள் சிதம்பரம் பஸ் நிலையத்தில் இறங்கி வேறு பஸ்களில் மாறி சென்று வருகின்றனர். அதனால் சிதம்பரம் பஸ் நிலையம் எப்போதுமே பரபரப்பாக காணப்படும். சிதம்பரம் பஸ் நிலைய வாயிலுக்கு அருகிலேயே டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளது. இதனால் ஏராளமான குடிமகன்கள் பகல், இரவு நேரம் கூட பார்க்காமல் பஸ் நிலையத்திலேயே அமர்ந்து மது அருந்தும் அவலநிலை தொடர்ந்து இருந்து வருகிறது. மதுபானக் கடைகளில் மதுவை வாங்கும் குடிமகன்கள், பயணிகள் ஓய்வெடுக்க வேண்டிய இடங்களில் அமர்ந்து மது அருந்துகின்றனர். இரவு, பகல் பாராமல் இவர்கள் மது அருந்துவதால் பயணிகள் முகம் சுளித்தபடியே ஓரமாக ஒதுங்கி நின்று கொள்கின்றனர். சிதம்பரம் பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு, போலீசார் நியமிக்கப்பட்டு இருந்தாலும் மது அருந்துபவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் நாளுக்கு நாள் பஸ் நிலையத்தில் மது அருந்தும் கூட்டம் அதிகரித்து வருகிறது. அதனால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Chidambaram Bus Stand ,
× RELATED குடிமகன்களின் மது அருந்தும் இடமாக மாறி வரும் சிதம்பரம் பஸ் நிலையம்