×

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

பண்ருட்டி, பிப். 11:  பண்ருட்டி டிஎஸ்பி அலுவலகத்தில் அனைத்து நுகர்வோர் சங்கங்களுக்கான ஆலோசனை கூட்டம் டிஎஸ்பி நாகராசன் தலைமையில் நடந்தது. பண்ருட்டி பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பேருந்து நிலையத்தில் குடிபிரியர்கள் குடித்துவிட்டு வருபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பேருந்துநிலையம் நுழைவாயிலில் நிறுத்தப்படும் கார், ஆட்டோ, பைக் போன்ற வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும். பாதையோர பாஸ்ட்புட் கடைகளில் மிளகாய்தூள், கார பொடிகள் பயன்படுத்தும்போது காற்றில் பறந்து வாகன ஓட்டிகளின் கண்களில் பட்டு விபத்து ஏற்படுவதை தடுக்க வேண்டும். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. நடவடிக்கை எடுப்பதாக டிஎஸ்பி உறுதி அளித்தார். இதில் அனைத்து நுகர்வோர் சுற்றுச்சூழல் பொதுநல சங்கத்தின் மாநில தலைவர் வழுதரெட்டி ஆரோக்கியசாமி, கூட்டமைப்பின் பொதுசெயலாளர் மெய்யழகன், கவுரவ தலைவர் கிருஷ்ணமூர்த்தி, அரசடிகுப்பம் முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

Tags :
× RELATED முயல்களை வேட்டையாடிய 2 பேர் அதிரடி கைது