×

கடலூர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகள் தொடர்பான கூட்டம்

கடலூர், பிப். 11: கடலூர் நகராட்சியில் அனைத்து வகை
யிலும் ரூ. 41.38 கோடி வரி பாக்கி உள்ளது. இதையடுத்து, வரி பாக்கி தொடர்பாக அனைத்து குடியிருப்போர் நலச் சங்க கூட்டமைப்பினர் மற்றும் நுகர்வோர், குடியிருப்போர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. கடலூர் நகராட்சி பகுதியில் 45 வார்டு பகுதிகள் உள்ள நிலையில் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலிமனை வரி, குடிநீர் கட்டண நிலுவை தொகை ஆகியவை சேர்த்து 26.6 கோடி வசூல் ஆகாமல் உள்ளது. இதுபோன்று தொழில்வரி, தொழில் உரிமக் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் ரூ. 15.2 கோடி என மொத்தத்தில் ரூ.41. 38 கோடி செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது. இதையடுத்து பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்ள நகராட்சி தரப்பில் வரிவசூல் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.  இதன் ஒரு பகுதியாக வணிக தரப்பினர் மற்றும் தொழில் நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் வரி வசூல் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடலூர் நகராட்சியில் நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி தலைமையில் வரி வசூல் தொடர்பாக அனைத்து குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் மற்றும் நுகர்வோர் கூட்டம் நடைபெற்றது. நகராட்சி மேலாளர் பழனி, நகர்நல அலுவலர் டாக்டர் அரவிந்த் ஜோதி மற்றும் டாக்டர் முரளி மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், குடியிருப்போர் சங்க நிர்வாகிகள், நுகர்வோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கியை பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் தொழில் நிறுவனங்கள் தரப்பில் செலுத்தினால் தான் நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகள் செம்மையாக மேற்கொள்ள வழிவகுக்கும் என எடுத்துரைக்கப்பட்டது. இதுபோன்று குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் தரப்பில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். தெருவிளக்கு, பாதாள சாக்கடை திட்ட பணிகள் உள்ளிட்டவை முழுமையடைய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

Tags : Cuddalore Municipality ,
× RELATED குறைந்த ஊதியம் வழங்கும் கூடலூர்...