×

விடுதலை சிறுத்தைகள் செயற்குழு கூட்டம்

கடலூர், பிப். 11: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் தெற்கு ஒன்றிய செயற்குழு கூட்டம் ராமாபுரத்தில் நடந்தது. ஒன்றிய செயலாளர் சுபாஷ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் ஆகியோர் பங்கேற்றனர். மாவட்ட அமைப்பாளர் சுரேஷ்பாபு, ஒன்றிய பொருளாளர் நடனசபாபதி, ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ஏகா கலியமூர்த்தி, ஒன்றிய துணை செயலாளர் செந்தமிழ் முன்னிலை வகித்தனர். மாநில துணைச்செயலாளர் பழனிவேல், மாவட்ட அமைப்பாளர்கள் செல்வம், புருஷோத்தமன், மாவட்ட துணை அமைப்பாளர் சங்கர், தொகுதி துணை அமைப்பாளர் ராஜ்குமார் மற்றும் ஜெயராஜ், பூவரசன், அஞ்சாபுலி உள்பட  பலர் பங்கேற்றனர். வரும் 14ம் தேதி கடலூர் முதுநகரில் கட்சியின் நிறுவன தலைவர் திருமாவளவன் எம்பி தலைமையில் நடைபெற உள்ள கட்சியின் மண்டல செயற்குழு கூட்டத்தில் தெற்கு ஒன்றியத்திலிருந்து திரளாக பங்கேற்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Liberation Panthers Working Committee Meeting ,
× RELATED கொரோனா வைரஸ் முன்தடுப்பு...