×

ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்ற 7 கடைகளுக்கு அபராதம்


ஜெயங்கொண்டம், பிப் .11: ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த 7 கடைகளுக்கு ரூ.13 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் அறச்செல்வி அறிவுறுத்தலின்படி அரியலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சசிகுமார் மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் தலைமையில் ஜெயங்கொண்டம் பேருந்து நிலைய சாலை மற்றும் சன்னதி தெரு ஆகிய பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 7 கடைகளில் 300 கிலோ அளவில் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த 7 கடைகளுக்கும் ரூ.13ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. ஆய்வின்போது   ,சுகாதார பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

தர்ணா போராட்டம்...
நேற்று இதுகுறித்து புகார் மனு அளிக்க வந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்கா முன்பு போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.அவர்கள் அனைவரும் ஒருமித்து கலெக்டரை நேரி ல் சந்திக்க அனுமதி கேட்டு, மறுக்கப்பட்டதால் கலெக் டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு சிறிது நேரம் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 புதிதாக பரிந்துரை…
மேலும் சிறுவாச்சூர்  மதுரகாளியம்மன்  கோயிலுக்கான சுற்றுச்சுவர், பக்தர்களுக்கான கூடுதல் கழிப்பறை வசதி, நேர்த்திக் கடனுக்காக மொட்டை அடிக்கும் வளாகம் அமைத்தல் போன்றவற்றுக்காக புதிதாக பரிந்துரைத்து திருப்பணிகள் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட் டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : shops ,municipality ,Jayankondam ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி