×

மக்களின் எழுச்சியால் தமிழகத்தில் அதிமுக அரசும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திலிருந்து நிலைப்பாட்டை மாற்றிகொண்டுள்ளது புதுச்சேரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் பேச்சு

காரைக்கால், பிப்.11: மக்களின் எழுச்சியால் தமிழகத்தில் அதிமுக அரசும், ஹைட்ரோ கார்பன் திட்டத்திலிருந்து, தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளதாக கருதவேண்டியுள்ளது. என, புதுச்சேரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார். காரைக்கால் அம்பகரத்தூர் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டக் குழு சார்பில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு, போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் அபு சாலி தலைமை வகித்தார். ஊர்வலத்தை புதுச்சேரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் தொடங்கி வைத்து பேசுகையில், மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதார இழப்பை மக்கள் மறந்துபோகவும், மூடி மறைக்கும் விதமாகவும் இது போன்ற மக்கள் விரோத சட்டங்களை பாஜக அரசு நிறைவேற்றி வருகிறது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மாற்றாக பாதுகாக்கப்பட் மண்டலமாக அறிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன. அதிமுக அரசு, பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறது. மக்களின் எழுச்சியால் அதிமுக அரசும் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு இவ்வாறான அறிவிப்பை செய்திருப்பதாகவே கருத வேண்டும். என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் முன்னாள் முதல்வர் ரங்கசாமி, பாஜக அரசு கொண்டுவந்த சட்டம் குறித்து தமது நிலைப்பாட்டை இதுவரை நிலையாக தெரிவிக்கவில்லை.

என்றார்.ஊர்வலம் நகரின் முக்கிய வீதியாக சென்று, கடைவீதியில் நிறைவு பெற்றது. ஊர்வலத்தின் நிறைவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் சிராஜ், நூருல் அமீன், அன்வர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தில், முன்னாள் அமைச்சர்கள் சுப்ரமணியன், சிவா, தமுமுக மாநில செயலாளர் அப்துல் ரஹீம், மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், பெண்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டத்தைத் கண்டித்தும், அவற்றை திரும்பப் பெறவும் வலியுறுத்தப்பட்டது.

Tags : Kamalakannan ,Puducherry ,speech ,government ,AIADMK ,Tamil Nadu ,
× RELATED குரங்கு பெடல் வெளியிடும் சிவகார்த்திகேயன்