×

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 357 மனுக்கள் குவிந்தன

நாகை,பிப்.11: நாகை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் மற்றும் பொது மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் பிரவீன்பி நாயர் தலைமையில் நடந்தது. மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டத்தில் வங்கிக் கடன், உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 23 மனுக்களும், பொது மக்கள் குறைதீர் கூட்டத்தில் குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 334 மனுக்கள் என மொத்தம் 357 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார் சத்துணவுத் திட்டத்தின் கீழ் சத்துணவு அமைப்பாளராகப் பணியிலிருக்கும் போது உயிரிழந்த ரவி என்பவரது வாரிசுதாரர் ஞானவள்ளி என்பவருக்கு சமையலராக கருணை அடிப்படையில் பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. தாட்கோ நிறுவனம் சார்பில் 26 பயனாளிகளுக்கு தொழில் தொடங்க ரூ.34 லட்சத்து 7 ஆயிரத்து 339 அரசு மானியத்துடன் கூடிய ரூ.1 கோடியே 19 லட்சத்து 50 ஆயிரத்து 614 மதிப்பிலான வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டது. டிஆர்ஓ இந்துமதி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : House ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்