×

நாகை மருத்துவக்கல்லூரி கட்டுமான பணி துவக்கம்

நாகை,பிப்.11: நாகையில் மருத்துவக்கல்லூரி கட்டுவதற்கான பணிகள் தொடங்கியதால் நாகை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காவிரி டெல்டாவின் கடைமடை மாவட்டமான நாகையில் விவசாயிகள், மீனவர்கள் என பலதரப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். துறைமுகம் நகரம் என்ற பெயரை கொண்ட நாகையில் செயல்பட்டு வந்த பல தொழிற்சாலைகளும் மூடப்பட்டது. இதனால் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாவட்டமாக நாகை இருந்து வருகிறது. இந்நிலையில் நாகை மாவட்ட மக்களின் பல ஆண்டு கனவான மருத்துவ கல்லூரி மாவட்ட தலைநகரில் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து நாகை மாவட்டம் ஓரத்தூர் பகுதியில் ரூ.365 கோடி மதிப்பில் அரசு மருத்துவ கல்லூரி கட்ட மத்திய அரசு அண்மையில் அனுமதி வழங்கியது. இதை தொடர்ந்து மருத்துவ கல்லூரி கட்டுவதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

ரூ. 365 கோடி மதிப்பீட்டில் 60 ஏக்கர் பரப்பளவில் மிக பிரமாண்டமாக இந்த மருத்துவ கல்லூரி அமையவுள்ளது. ரூ.101 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவமனையும், ரூ.95 கோடியே 30 லட்சம் மதிப்பில் மருத்துவ கல்லூரியும், ரூ.99 கோடியே 80 லட்சம் மதிப்பில் தங்கும் விடுதியும் என்று 24 கட்டிடங்கள் அமைய உள்ளது. ஆறு அடுக்குகளை இந்த மருத்துவமனை கொண்டுள்ளது. மருத்துவக்கல்லூரி, அலுவலகங்கள், மாணவ மாணவியருக்கான விடுதிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான குடியிருப்புகள், வங்கி, அஞ்சலகம், உடற்பயிற்சி கூடம் மற்றும் நவீனமயக்காப்பட்ட குளிரூட்டப்பட்ட பிணவறை என அதிநவீன மருத்துவ உபகரணங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.

மருத்துவ கல்லூரி அமையவுள்ள ஒரத்து£ர் பகுதியில் முதல் கட்டமாக மண் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அங்குள்ள கருவேல மரங்களை அகற்றப்படுகிறது. மெயின் ரோட்டில் இருந்து மருத்துவக்கலூரி நோக்கி செல்லும் சாலைகள் தார் சாலைகளாக மாற்றப்படுகிறது. கட்டிடம் அமையவுள்ள இடத்தில் மண் சமன்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மருத்துவ கல்லூரி அமையவதற்கு முதற்கட்ட பணிகள் தொடங்கி இருப்பது நாகை பகுதி மக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடுகடலில் மீனவர்கள் தாக்கப்படும் போது உயிருக்கு போராடுபவர்களை திருவாரூர், தஞ்சை ஆகிய இடங்களில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தான் அழைத்து செல்ல வேண்டிய அவலம் இருந்தது. நாகையில் மருத்துவக்கல்லூரி அமைந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதே நேரத்தில் தரம் வாய்ந்த மருத்துவ வசதிகளை பெற முடியும் என்று நாகை மக்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : Commencement ,Nagai Medical College ,
× RELATED ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரமோற்சவ...