×

பொதுமக்கள் மகிழ்ச்சி சீர்காழியில் மார்க்கோனி ஐஏஎஸ் அகாடமி திறப்பு

சீர்காழி, பிப்.11: சீர்காழி எல் எம் சி மேல்நிலைப்பள்ளி எதிரே ராயல் ஜவுளிக்கடை மாடியில் மாணவ மாணவிகள் உயர் பதவிகளுக்கு செல்லும் வகையில் மார்க்கோனி ஐஏஎஸ் அகாடமி திறப்பு விழா நடைபெற்றது. ஓய்வுபெற்ற ஆசிரியர் வீரபாண்டியன் கலந்துகொண்டு மார்க்கோனி ஐஏஎஸ் அகாடமியை திறந்து வைத்து பேசினார். இந்த அகாடமியில் டிஎன்பிசி குரூப் I II IV போலீஸ் எஸ்ஐ TET TRB ரயில்வே பாரஸ்ட் போன்ற போட்டித் தேர்வுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்படுகின்றன. இந்த பயிற்சி முகாமில் அனுபவம். ஆற்றல் மிக்க ஆசிரியர்களை கொண்டு சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் மார்கோனி ஐஏஎஸ் அகாடமி நிர்வாகி பொறியாளர் மார்கோனி, ஆசிரியர்கள் ராஜா, சம்பத், அரவிந்த் பிரவீனா ,ராஜசேகர் சரவணன், மோகன், செல்வம் விஜயன் வீரமணி ஆறுமுகம் சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நடுகடலில் மீனவர்கள் தாக்கப்படும் போது உயிருக்கு போராடுபவர்களை திருவாரூர், தஞ்சை ஆகிய இடங்களில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தான் அழைத்து செல்ல வேண்டிய அவலம் இருந்தது. நாகையில் மருத்துவக்கல்லூரி அமைந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Tags : Opening ,Marconi IAS Academy ,
× RELATED திருச்செந்தூரில் தண்ணீர் பந்தல் திறப்பு