×

சேவூரில் ரூ.5 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்

அவிநாசி,பிப்.11:அவிநாசி அருகே சேவூரில் உள்ள ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடந்த நிலக்கடலை ஏலத்தில் ரூ.5 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.சேவூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 289 மூட்டை நிலக்கடலை வந்திருந்தன. குவின்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.4,450 முதல் ரூ.4,810 வரையிலும், 2வது ரக நிலக்கடலை ரூ.4,860 முதல் ரூ.5,000 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ.5,050 முதல் ரூ.5,350 வரையிலும் ஏலம் போனது.மொத்தம் ரூ.5 லட்சத்திற்கு ஏலம் நடைபெற்றது.இதில் 5 வியாபாரிகளும், 42 விவசாயிகளும் பங்கேற்றனர்.

Tags : Groundnut auction ,
× RELATED சேவூரில் ரூ.5 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்