×

கட்டுமான பணிக்காக கட்டிய தொட்டி திறந்தே கிடக்கிறது விடுமுறை நாட்களில் மூடி வைக்கப்படுமா?

கரூர், பிப். 11: கரூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே கட்டுமான பணிக்காக கட்டப்பட்ட தொட்டி திறந்த நிலையில் உள்ளது. இதனை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாவட்டம் கொளந்தானூர் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகள் முடிவுற்று தற்போது முதலாமாண்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.இதன் அருகே, கல்லூரி கட்டுமான பணிகளுக்காக மெகா சைஸ் தொட்டி கட்டப்பட்டு, அதில் தண்ணீர் நிரப்பி பயன்படுத்தப்பட்டது. தற்போதும் ஆங்காங்கே கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால், விடுமுறை நாட்களில் பணிகள் நடைபெறாத சமயத்தில் தொட்டி எப்போதும் திறந்த நிலையில் தண்ணீருடன் உள்ளது. இந்த தொட்டி பகுதியை சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. சிறுவர், சிறுமிகள் இதன் அருகே விளையாடி வருகின்றனர்.எனவே, சிறுவர்,சிறுமியர் பாதுகாப்பு கருதி விடுமுறை நாட்களிலும், பணிகள் நடைபெறாத சமயங்களிலும், தொட்டியை பாதுகாப்பாக மூடிட தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : construction ,
× RELATED மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...