×

மற்றொருவர் சீரியஸ் மணத்தட்டை ஊராட்சி அரசு பள்ளி அருகே சுகாதார சீர்கேடு: அதிகாரிகள் மெத்தனம்

குளித்தலை, பிப்.10: குளித்தலை ஒன்றியம் மணத்தடை ஊராட்சியில் அரசு ஆரம்பப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை ஏராளமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளி எதிரே திமுக இரண்டாவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் சாந்தாஷீலா விஜயகுமார் வீடும் உள்ளது. மேலும் இப்பகுதி குடியிருப்பு நிறைந்த பகுதியாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் அரசுப்பள்ளி அருகே அதிக குப்பைகளை மக்கள் கொட்டி வருவதால் சுற்றுப்புற சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் கிராமப்புறங்களில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படும் நிலை இருந்து வருகிறது.

இந்நிலையில் மணதட்டை அரசு ஆரம்பப் பள்ளி அருகே சுற்றுப்புற சுகாதார சீர்கேட்டினை சரி செய்யுமாறு திமுக ஒன்றிய கவுன்சிலர் சாந்தா ஷீலா விஜயகுமார், குளித்தலை வட்டார வளர்ச்சி அலுவலர் மங்கையர்கரசிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் வட்டார வளர்ச்சி அலுரலர் பெயரளவிற்கு மட்டும் 2 வண்டி செம்மண்ணை மட்டும் கொட்டிவிட்டு ஒப்பந்தக்காரர்கள் சென்றுவிட்டனர். மேற்கொண்டு அம்மண்ணை சமப்படுத்துவதற்கான எந்தவித வேலையும் செய்யவில்லை. இதனால் குப்பை கூளங்கள் காற்றில் பறந்து பள்ளி வளாகத்துக்குள் செல்கிறது. இதனால் பள்ளி குழந்தைகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே வட்டார வளர்ச்சி அலுவலர் மங்கயர்கரசி இப்பணியை முழுமையாக செய்யாவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என ஒன்றிய கவுன்சிலர் சாந்தாஷீலா விஜயகுமார் அறிவித்துள்ளார்.

Tags : Government School ,Sirius Manattattu ,
× RELATED இந்தியாவிற்கு இந்த தேர்தல் மிகவும்...