×

திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன் குளித்தலை ஒன்றியத்தில் ஊரக புத்தாக்க திட்ட விளக்க கூட்டம்

குளித்தலை, பிப்.11: குளித்தலை ஒன்றியத்துக்கு உட்பட்ட சமுதாயம் சார்ந்த மக்கள் அமைப்புகளுக்கு வட்டார அளவிலான திட்ட விளக்க கூட்டம் குளித்தலை வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் நடந்தது. தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க இணை இயக்குனர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். உதவி திட்ட அலுவலர் மகளிர் திட்டம் ஜெயசித்ரா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமரவேல், மங்கையர்க்கரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஊரக புத்தாக்க திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலர் சுதாதேவி வரவேற்பு மற்றும் திட்ட விளக்க உரையாற்றினார்.

இத்திட்ட விளக்கவுரையில் அவர் கூறியதாவது,
இத்திட்டத்தின் மூலம் ஊராட்சியின் தொழில் முனைவோர்களை உருவாக்குதல் , நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்குவதோடு ஊரக சமுதாயத்தில் நிலைத்த உயர்வினை உருவாக்கி மாற்றத்தை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தில் சுய உதவி குழுக்களின் உறுப்பினர்களின் குடும்பங்களே முதன்மை பயனாளிகள் ஆவர். உற்பத்தியாளர் குழு, தொழில் குழு, தனிநபர் தொழில் நிறுவனங்களை உருவாக்குதல் மற்றும் ஊரக இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு மற்றும் வேலை வாய்ப்பு அளித்தல் மூலம் கிராம மக்கள் பெரிதும் பயனடைவார்கள் என்று கூறினார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் இப்ராஹிம், செயல் அலுவலர்கள், அணித்தலைவர்கள், திட்ட செயலர்கள், மகளிர் திட்ட வட்டார பணியாளர்கள் அனைத்து ஊராட்சி உறுப்பினர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags : Rural Innovation Project Meeting ,Pilgrimage Bathing Union ,
× RELATED குறுவை சாகுபடி பொய்த்து போனதால் சோளம் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்