×

தேசிய நெடுஞ்சாலையில் சீரமைப்பு பணிகள் பார்வதிபுரத்தில் போக்குவரத்து நெரிசல்

நாகர்கோவில், பிப்.11:  தேசிய நெடுஞ்சாலையில் பேட்ஜ் ஒர்க் பணிகள் நடைபெற்ற நிலையில் நாகர்கோவில்-திருவனந்தபுரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நாகர்கோவில்- களியக்காவிளை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சீரமைப்பு பணிகள் தாமதம் அடைந்து வந்தது. இதனால் சாலைகள் முழுவதும் குண்டு குழிகள் நிறைந்து காணப்பட்டது. இதனால் விபத்துகளும் தொடர்ந்து ஏற்பட்டு வந்தன. இந்த சாலை சீரமைப்பு உள்ளிட்ட பணிக்காக ரூ.49 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பணிகள் தொடங்கவில்லை என குற்றச்சாட்டுகளும் இருந்து வருகிறது.

இந்தநிலையில தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் பள்ளமான பகுதிகளை சீரமைக்கும் வகையில் பார்வதிபுரம்- தோட்டியோட்டில் நேற்று பேட்ச் ஒர்க் பணிகள் தொடங்கின. இதனால் பார்வதிபுரம் பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஆம்புலன்ஸ்களும் திணறின. பேட்ஜ் ஒர்க் பணிகளை வாகன நெரிசல் குறைந்த இரவு நேரத்தில் மேற்கொண்டால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் இருக்காது என்று வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்தனர்.

Tags :
× RELATED சீரமைப்பு பணி என்ற பெயரில் அடையாறு...