×

என்ஐடிடியில் பொங்கல் திருவிழா

திருச்சி, பிப்.7: என்ஐடிடி கல்லூரியில் பாரம்பரிய விளையாட்டு மற்றும் கலாச்சார பொங்கல் திருவிழா நடைபெற்றது. விழாவில் தப்பாட்டம் வீதி உலா, சூரிய வணக்கம் மற்றும் பொங்கல் வைத்தல், பரதநாட்டியம், சிலம்பம் கலை நிகழ்ச்சிகள், சொற்போர், பாரம்பரிய விருந்து, சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், கலைநிகழ்ச்சிகள், இளைஞர்களுக்கான போட்டிகள், உறியடி மற்றும் கோபுர உரியடி, தீச்சிலம்பம், ஆடலும் பாடலும், உள்பட பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள், மாநில துணைத்தலைவர் நந்தலாலா, ஆசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : festival ,NITD ,
× RELATED 10 ஆண்டுகளுக்கு பிறகு கீழத்தூவலில் மீன்பிடி திருவிழா உற்சாகம்