×

அமைச்சர் பெருமிதம் கடன் சுமையால் விரக்தி மெக்கானிக் தூக்கு மாட்டி தற்கொலை

திருவெறும்பூர், பிப்.7:திருவெறும்பூர் அருகே உள்ள பொன்மலைப்பட்டியில் சுய உதவிக் குழுக்களிடம் வாங்கிய கடனை அடைக்க முடியாததால் மனமுடைந்த ஆட்டோ மெக்கானிக் தற்கொலை செய்து கொண்டார். திருவெறும்பூர் பொன்மலைப்பட்டி அடைகள அண்ணை நகர் 2வது தெருவை சேர்ந்தவர் வடிவேல் (32). ஆட்டோ மெக்கானிக். இவரது மனைவி கவிதா (27). இவர்களுக்கு வனிதா, அருள் பிரசாத் என்ற இரு குழந்தைகள். தற்போது வடிவேல் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான வடிவேல் தான் சொந்தமாக ஆட்டோ வாங்குவதற்காக 4 சுய உதவி குழுக்களின் மூலம் 2 லட்சத்து 60 ஆயிரம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வடிவேல் தனது மனைவி கவிதாவிடம் சுய உதவிக் குழுக்களுக்கு தவணை தொகை செலுத்த ரூ.5 ஆயிரம் கேட்டுள்ளார். அதற்கு கவிதா தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வடிவேல் நேற்று அதிகாலை தனது வீட்டின் இரும்பு பைப்பில் தூக்கில் தொங்கினார். இதை பார்த்து கவிதா கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் வந்து வடிவேலுவை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் புகார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : Minister ,mechanic ,
× RELATED மதத்தை தவிர பேசுவதற்கு பாஜகவினரிடம்...