×

வயலூர் முருகன் கோயிலில் தைப்பூச விழா நாளை துவக்கம்

திருச்சி, பிப்.7: திருச்சி மாவட்டம் திருவரங்கம் வட்டம் வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை (பிப்.8ம் தேதி) தைப்பூச பெருவிழா கோலாகலத்துடன் தொடங்குகிறது. விழாவையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு, அர்ச்சனைகள், அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. பின்னர் முத்துக்குமாரசுவாமி புறப்பட்டு, உய்யக்கொண்டான் ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. அதவத்தூர் ஆற்றின் கரையில் அமைந்துள்ள மண்டபத்தில் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இரவு சர்வ அலங்காரத்துடன் மகாதீபாராதனை நடைபெறுகிறது. அங்கிருந்து புறப்பட்டு வயலூர் வழியாக வரகாந்திடலை சென்றடையும் அங்கு மண்டகப்படி பெற்று கீழவயலூர், தைப்பூச் மண்டபத்திற்கு இரவு வந்தடையும். அங்கு மகாதீபாராதனை நடைபெற்று நள்ளிரவு புறப்பாடாகி வடகாபுத்தூர் கிராமம் வந்தடையும். வடகாபுத்தூரில் புறப்பட்டு உய்யக்கொண்டான் திருமலை உஜ்ஜவநாத சுவாமி, அல்லித்துறை பார்வதீஸ்வரர் சுவாமி, சோழங்கநல்லூர் காசிவிஸ்வநாதர் சுவாமி, சோமரசம்பேட்டை முத்துமாரியம்மன், ஆகிய சுவாிகளுக்கு காலை 5 கிராம சுவாமிகளும் சந்திப்பு கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் சோமரசம்பேட்டை நான்கு வீதிகளில் வலம் வந்து சோமரசம்பேட்டையில் உள்ள தைப்பூச மண்டபத்திற்கு வந்தடையும்.

அங்கு அனைத்து சுவாமிகளும் தங்கி இரவு பக்தர்களுக்கு அருள்பாளித்து, அந்தந்த கோயில்களுக்கு சுவாமிகள் புறப்படும் நிகழ்ச்சி நடைபெறும். தைப்பூசத்தன்று வயலூர் முருகன் கோயிலுக்கு திருச்சி மாநகரின் பல்வேறு பகுதியில் இருந்து வருகை தரும் பக்தர்கள் வந்துசெல்வதற்கு சிறப்பு பேருந்துகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தினால் இயக்கப்படுகிறது. பாதுகாப்பு பணிகளை சோமரசன்பேட்டை போலீசார் செய்து வருகின்றனர்.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துணை இணை ஆணையர் சுதர்சன், உத்தரவுப்படி ராணி தக்கார் மற்றும் உதவி ஆணையர், கோவில் நிா்வாக அதிகாரி ராமநாதன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags : Valayur Murugan Temple ,
× RELATED அதிகமான விபத்துக்கள் நடந்து வருவதால்...