×

முத்துப்பேட்டை பகுதி அரசு பள்ளி மாணவர்களுக்கு வடிவியல் உபகரண பெட்டிகள் வழங்கல்

முத்துப்பேட்டை, பிப். 7: முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வட்டார வளமைய அலுவலகத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பி–்ல் அனைத்து அரசு நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு வடிவியல் பாடங்களை போதிக்க வடிவியல் உபகரண பெட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது. இதற்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் முத்தண்ணா தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் முருக பாஸ்கரன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட கல்வி அலுவலர் சங்கு முத்தையா கலந்து கொண்டு ஒன்றியத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலை பள்ளி தலைமைசிரியர்களிடம் வடிவியல் உபகரணப்பெட்டிகளை வழங்கினார். இதில் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், கல்வித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : area government school students ,Muthupettai ,
× RELATED முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி...