×

தி.பூண்டி வேளூர் கணமங்கலத்தில் அரிவாட்டாய நாயனார் முக்தி அடைந்த நாள் நீடாமங்கலம் ராயபுரத்தில் வெள்ளத்தை தாங்கி வளரும் நெல் ரக வயல் தின விழா

நீடாமங்கலம், பிப். 7: நீடாமங்கலம் அருகில் உள்ள நிக்ரா தத்து கிராமமான ராயபுரம் கிராமத்தில் வெள்ளத்தை தாங்கி வளரும் சி.ஆர் 1009 சப் 1 நெல் ரக வயல் தின விழா நடந்தது. விழாவிற்கு நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்ரமணியன் தலைமை வகித்தார். மண்ணியியல்துறை உதவி பேராசிரியர் அனுராதா கலந்து கொண்டு பேசுகையில், இந்த ரகமானது வெள்ளத்தை தாங்கி வளரக்கூடிய ரகமாகும். 150 நாட்கள் வயதுடைய சம்பா பருவத்திற்கு ஏற்றதும், நீண்ட கால உயர் விளைச்சல் தரக்கூடிய மோட்டா ரகமாகும். 14 முதல் 17 நாட்கள் வரை வெள்ள நீரில் மூழ்கி இருந்தாலும் தாங்கி வளரும் தன்மை கொண்டது என்றார்.

பூச்சியியல்துறை உதவி பேராசிரியர் ராஜாரமேஷ் பேசுகையில் நோய் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்துவது பற்றி விளக்கினார். விவசாயி சுகுமாறன் பேசுகையில் இந்த ரகத்தில் இந்த வருடம் பூச்சி அதாவது குருத்துப்பூச்சி, புகையான் மற்றும் நெற்பழ நோய் தாக்குதல் மற்ற ரகங்களை விட குறைவாக இருந்தது. இதனால் பூச்சி மருந்து தெளிப்பதற்கான செலவு இல்லை. மகசூலானது ஏக்கருக்கு 1800 முதல் 2000 கிலோ வரை கிடைத்துள்ளது என்றார். விழாவில் 19 விவசாயிகள் கலந்து கொண்டனர். உழவியல்துறை பயிற்சி உதவியாளர் ராஜேஷ்குமார், நிக்ரா திட்ட முதுநிலை ஆராய்ச்சியாளர் விஜிலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Aruvattaya Nayanar ,paddy field ,Bundi Vellore Ganamangalam ,Needamangalam Raipur ,
× RELATED நெல்லை களக்காடு தலையணை சுற்றுலா தளம் 4 மாதங்களுக்கு பின் திறப்பு