×

விவசாயிகள் கவலை மத்திய பட்ஜெட்டை கண்டித்து திருத்துறைப்பூண்டியில் சிஐடியு தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி, பிப். 7: மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, தேச விரோத, பட்ஜெட்டை கண்டித்தும் எல்ஐசி, வங்கி ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை கண்டித்து சிஜடியு தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் நேற்று மாலை நடைபெற்றது. சிஐடியு நகர ஒருங்கிணைப்பாளர் செல்வம் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாவட்ட செயலாளர் முருகையன், பொருளாளர் பாண்டியன், டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் லெனின், முறை சாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

Tags : CITU ,trade union protest ,Tirupur ,
× RELATED சிஐடியு ஓட்டுநர் சங்க பேரவை கூட்டம்