×

தடுப்புகட்டைகள் அகற்றம் அரசு போக்குவரத்து ஊழியர்களை மீண்டும் அரசு ஊழியராக்கிட வேண்டும்

கும்பகோணம், பிப்.7: கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு கும்பகோணம், நாகை அம்பேத்கர் போக்குவரத்து தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் வாயிற் கூட்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கும்பகோணம் மண்டல பொதுச்செயலாளர் ரமேஷ் குமார் தலைமை வகித்தார். நாகை மண்டல பொதுச் செயலாளர் ராஜ்மோகன் வரவேற்றார். குடந்தை மண்டல செயல் தலைவர் காளிமுத்து, குடந்தை மண்டல தலைவர் ஜீவராஜ், நாகை மண்டல தலைவர் மண்டல பொருளாளர் திலகராஜ், குடந்தை மண்டல துணைச் செயலாளர் வீரமணி, குடந்தை மண்டல அமைப்புச் செயலாளர் தியாகராஜன், குடந்தை மண்டல துணை பொது செயலாளர் முருகேசன், குடந்தை மண்டல துணைத்தலைவர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், அரசு போக்குவரத்து ஊழியர்களை மீண்டும் அரசு ஊழியராக்கிட வேண்டும், ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு ஓய்வு பெறும் நாளன்றே பண பலன்களை உடனே வழங்க வேண்டும், 2003ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். ஓட்டுநர், நடத்துனர்களுக்கு 8 மணி நேர வேலையை உறுதி செய்திட வேண்டும். அனைத்து பேருந்துகளிலும் காப்பீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷமிட்டனர்.

இந்தக் கூட்டத்தில், பேரவை செயல் தலைவர் பரமசிவம், பேரவை பொதுச்செயலாளர் அண்ணாதுரை, தலைமை நிலைய பொதுச் செயலாளர் கவுதமன், பேரவை பொருளாளர் மாதப்பன் ஆகியோர் கோரிக்கை விளக்க பேசினர். ஆர்ப்பாட்டத்தில், மாநில கருத்தியல் பரப்புத் துணைச் செயலாளரா அரசாங்கம் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் தமிழருவி, தஞ்சை திருச்சி மண்டல செயலாளர் விவேகானந்தன், குடந்தை சட்டமன்ற தொகுதி செயலாளர் முல்லைவளவன், பேரவை துணை பொது செயலாளர் கதிரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மண்டல பொருப்பாளர் சசிகுமார் நன்றி கூறினார்.

Tags : Removal ,Government ,transport workers ,Blockchains ,servants ,
× RELATED வெயிலில் இருந்து போக்குவரத்து...