×

நுாதன போராட்டம் நடத்த பக்தர்கள் முடிவு குடந்தை நகராட்சி சீர்கேட்டை கண்டித்து 13ம்தேதி பொதுமக்கள் சாலை மறியல்

கும்பகோணம், பிப்.7: கும்பகோணம் தாசில்தாரிடம் காவேரிநகர் பொதுமக்கள் சார்பில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கும்பகோணம், டாக்டர் மூர்த்தி சாலையிலுள்ள, செல்லம் நகர் மற்றும் காவேரி நகரில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தனியார் காண்டிராக்ட் நிறுவனம் மூலம் தினசரி காலையில் இந்நகரில் உள்ள வீடுகளுக்கு வந்து குப்பைகள் சேகரிக்கப்பட்டு வந்தது. எங்களிடமிருந்து நகராட்சி வரி வசூலில், குப்பைகளை அள்ளுவதற்கான கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. ஆனால் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வீடுகளில் உள்ள குப்பைகளை அள்ளுவதற்கு தனியார் நிறுவன காண்டிராக்ட் ஊழியர்கள் வராததால் தெரு முழுவதும் குப்பைகள் தேங்கியுள்ளது. செல்லம்நகர் மற்றும் காவேரி நகரில் முறையான துப்புரவு பணிகள் இல்லாததால் நகர் முழுவதும் பெரும் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

சில இடங்களில் குப்பைகளை அப்புறப்படுத்தாமல் தனியார் நிறுவன காண்டிராக்ட் ஊழியர்கள் நெருப்புவைத்து எரிக்கும் அவலமும் உள்ளது. நகராட்சிக்கு சொந்தமான பூங்காவிலும் சுகாதார பணிகள் நடைபெறுவதில்லை. இது குறித்து நேரிலும், தொலைபேசியிலும் புகார் அளித்தாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. நகரில் தொற்று நோய்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, குப்பைகளை அகற்றாமல், பொதுசுகாதாரத்தை பாதுகாக்க தவறும் கும்பகோணம் நகராட்சி மற்றும் தனியார் காண்டிராக்ட் நிறுவனத்தை கண்டித்து வருகிற 13ம்தேதி காலை 10 மணியளவில் நகராட்சி அலுவலகம் எதிரில், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் பாரதி, தலைமையில் சாலை மறியல் போராட்டம் பொதுமக்கள் சார்பில் நடைபெறவுள்ளது என தெரிவித்துள்ளனர்.

Tags : Pilgrims ,micro-agitation ,
× RELATED நாகூர் தர்காவில் 467வது கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்