×

முதல்வருக்கு, காவிரி விவசாயிகள் சங்கம் கோரிக்கை மோட்டார் வாகன விபத்து வழக்கில் சமரச தீர்வு காண லோக்அதாலத் நாளை நடக்கிறது

தஞ்சை, பிப்.7: கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்தின் வழக்குகளுக்காக நாளை (8ம் தேதி) காலை 10 மணிக்கு தஞ்சை நீதிமன்றத்தில் தேசிய லோக் அதாலத் நடைபெற உள்ளது.மாநில சட்டப்பணிகள் குழு சார்பில் சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரசத் தீர்வு காண தேசிய லோக்அதாலத் நடைபெற உள்ளது.

இதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் லிட்., தொடர்பான மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு சமரசத் தீர்வு கண்டு சம்பந்தப்பட்டவர்கள் பயன்பெறலாம். எனவே சம்பந்தபட்டவர்கள் இது தொடர்பாக கும்பகோணம் மண்டலம் 0435-2403724, திருச்சி மண்டலம் 0431-2415551, காரைக்குடி மண்டலம் 04565-234125, புதுக்கோட்டை மண்டலம் 04322-266111 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags : Cauvery Farmers' Association ,motor vehicle accident ,
× RELATED மேலாண்மை ஆணையத்தை கண்டித்து...