×

சேலத்தில் துணிகரம் ரயில்வே அதிகாரி, டாக்டர் வீட்டில் 50 பவுன் நகை, பணம் கொள்ளை

சேலம், பிப். 7: சேலம் சூரமங்கலம் முல்லை நகரை சேர்ந்தவர் பசுபதி(57). இவர் சேலம் ரயில் நிலையத்தில் டிக்கெட் புக்கிங் முதன்மை கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கனகராணி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, வரும் 26ம் தேதி திருமணம் நடக்கிறது. இதற்காக பசுபதி உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், கடந்த 4ம் தேதி பசுபதி வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள உறவினர்களுக்கு மகளின் திருமண அழைப்பிதழை கொடுக்க மனைவி, மகளுடன் சென்றார். திருமணம் அழைப்பிதழை  உறவினர்களுக்கு  கொடுத்து விட்டு, நேற்று காலை சேலத்துக்கு வந்தனர்.
வீட்டிற்கு வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்திருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்த போது  அங்கு பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவை உடைத்து 43 பவுன் நகை, 20 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இதுகுறித்து அவர் சூரமங்கலம் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் உதவி கமிஷனர் பூபதிராஜன், இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், தடய அறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான கொள்ளையர்களின் கைரேகைகளை சேகரித்தனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் கொள்ளையன் உருவம் பதிவாகியுள்ளா என போலீசார்ஆய்வு செய்து வருகின்றனர். சேலம் குரங்குசாவடி பெருமாள் மலை அடிவார பகுதியை சேர்ந்தவர் டாக்டர் வெங்கடேசன். இவர் கும்பத்துடன் கடந்த 4ம் தேதி வீட்டை பூட்டி விட்டு கொளத்தூரில் உள்ள உறவினர் திருமணத்துக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 7 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அவர் சூரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சூரமங்கலத்தில் நகைக்கடை அதிபர் வீட்டில் 275 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். தற்போது ரயில்வே அதிகாரி, டாக்டர் வீட்டில் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : doctor ,Salem Venture Railway ,house ,officer ,
× RELATED டூவீலர் திருடிய ெதாழிலாளி கைது