×

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இன்று நடக்கும் ஆத்தூர் காங்., பொதுக்கூட்டத்திற்கு கட்சியினர் திரண்டு வர அழைப்பு

சேலம், பிப்.7: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஆத்தூரில் இன்று நடக்கும் கையெழுத்து இயக்கம், பொதுக்கூட்டத்திற்கு திரண்டு வாருங்கள் என மாநில செயல்தலைவர் மோகன் குமாரமங்கலம் அழைப்பு விடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மாநில செயல்தலைவர் மோகன் குமாரமங்கலம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய பாஜ அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை காங்கிரஸ் எதிர்க்கிறது. இச்சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறது. சேலம் மாவட்டம் ஆத்தூரில் இன்று (7ம் தேதி), குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தியும், என்பிஆர் மற்றும் என்ஆர்சி திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், பாஜ அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்தும் காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம் மற்றும் கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது.

ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் மணிக்கூண்டு அருகே மாலை 4 மணிக்கு நடக்கும் இக்கூட்டத்தில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு பேசவுள்ளார். இக்கூட்டத்தில் சேலம் மாவட்டம் முழுவதும் இருந்து கட்சி நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்தஅறிக்கையில் செயல்தலைவர் மோகன்குமாரமங்கலம் கூறியுள்ளார்.

Tags : Attur Cong ,
× RELATED கிளி வளர்த்த 3பேருக்கு ₹15 ஆயிரம் அபராதம்