×

தர்மபுரிக்கு தர்பூசணி வரத்து தொடக்கம்

தர்மபுரி, பிப்.7: தர்மபுரி நகரில் தர்பூசணி வரத்து தொடங்கியுள்ளதையடுத்து, கிலோ 12க்கு விற்பனை செய்யப்பட்டது.  தர்பூசணி கோடை வெயிலுக்கு உகந்ததாகும். இனிப்பு சுவையும், தண்ணீர் சத்தும் அதிகமாக உள்ளதால், தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் தர்பூசணி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் திண்டிவனம் மார்க்கெட்டில் இருந்து தினமும்  தர்பூசணி விற்பனைக்கு வருகிறது. இன்னும் கோடை காலம் தொடங்காத நிலையில், தர்மபுரி சந்தைப்பேட்டை தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு, கடந்த சில தினங்களாக திண்டிவனம் பகுதியில் இருந்து தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இவை தர்மபுரி நகரில் உள்ள பழக்கடைகளில் கிலோ 12க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Dharmapuri ,
× RELATED கொரோனா பாதிப்பால் வாங்க ஆளில்லை...