×

விவசாயிகள் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் புதர் மண்டி கிடக்கும் மகளிர் சுகாதார வளாகம் சீரமைக்கப்படுமா?

தா.பழூர்,பிப்.7: விக்கிரமங்கலம் கிராமத்தில் புதர் மண்டி கிடக்கும் மகளிர் சுகாதார வளாகம் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட விக்கிரமங்கலம் கிராமத்தில் உள்ள மகளிர் சுகாதார வளாகம் பயன்பாடு இல்லாமல் கிடைக்கிறது. இந்த வளாகம் பல வருடங்களாக பொதுமக்கள் பயன்பாடு இன்றி கருவேல மரங்கள் மண்டி கிடக்கின்றன. மேலும் இதில் மின்சார வசதி இல்லாததாலும், போதிய சுகாதாரம் இல்லாததாலும் பொதுமக்கள் பயன்படுத்தாமல் கிடப்பில் கிடந்து வருகிறது. இதன் அருகில் அங்கன்வாடி மையம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தை சுற்றிலும் பொது மக்கள் குடியிருப்பு வீடுகள் அதிகமாக உள்ளன.

அதிகப்படியாக மக்கள் வீடுகளில் வசித்து வரும் பகுதியில் இதுபோன்று கருவேலம் முட்புதர்கள் மண்டி இருப்பதால் பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷ பூச்சிகள் இதில் பல வருடங்களாக உள்ளது. இதனால் அவ்வப்போது வீடுகளுக்குள் வந்து விஷப்பூச்சிகள் அச்சுருத்தி செல்கின்றன. மேலும் அருகில் அங்கன்வாடி மையம் இருப்பதால் குழந்தைகள் வெளியில் விளையாடுவதும் பள்ளியில் அமர்ந்திருப்பதும் அவ்வளவு பாதுகாப்பானது இல்லை . இந்த நேரத்திலும் இந்த முட்புதர் கூடாரங்களில் இருந்து பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட அருகில் உள்ள அங்கன்வாடி மைய பகுதிக்குள் நுழைந்தால் குழந்தைகள் அவை என்ன என்று தெரியாமல் கையில் பிடித்து விளையாடக்கூடிய நிலையில் உள்ளனர். ஆகையால் குழந்தைகளையும் வீடுகளில் பொதுமக்களையும் அச்சுறுத்தும் வகையில் இவற்றில் விஷப்பூச்சிகள் வாழ்ந்து வருவதால் கருவேல மரங்களை அகற்றி மகளிர் சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Farmers' Demanding Demonstration ,
× RELATED அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட...