×

தாந்தோணிமலை பகுதியில் செயல்படும் வங்கிகளில் திடீர் திடீரென அலாரம் ஒலித்ததால் பரபரப்பு

கரூர், பிப். 7: கரூர் தாந்தோணிமலை பகுதியில் செயல்படும் சில வங்கிகளில் திடீர் திடிரென அலாரம் ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கரூர் நகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணிமலை பகுதியில் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் என பல்வேறு வங்கிகள் செயல்பட்டு வருகிறது.இந்த வங்கிகள் அனைத்திலும் அலாரம் பொருத்தப்பட்டுள்ளது. அலாரம் அடிக்கும் நேரங்களில் கரூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்துக்கு ஆட்டோமேட்டிக்காக போன் போகும் அளவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தாந்தோணிமலை பகுதியில் உள்ள சில வங்கிகளில் இருந்து கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் திடீரென அலாரம் ஒலி எழுப்பப்படுகிறது.இதனால் வங்கிக்கு வந்து செல்லும் வாடிக்கையாளர்களும் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றனர்.அலாரம் ஒலித்த சில நிமிடங்களிலேயே எஸ்பி அலுவலகத்துக்கும் போன் சென்று விடுவதால் அங்குள்ள போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்க்கும் நேரங்களில் தெரியாமல் கை பட்டு அலாரம் ஒலித்து விட்டதாக கூறப்படுவதாக போலீசார் கூறுகின்றனர்.எனவே அலாரம் ஒலிக்கும் விதத்தில் கூடுதல் கவனத்துடன் அனைவரும் செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும், கோரிக்கையாகவும் உள்ளது.

கைகால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், காது கேளாதோருக்கான 400, 200, 100, 50 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், நின்ற நிலையில் தாண்டுதல், சாப்ட் பந்து எறிதல், நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகள்
நடத்தப்பட்டன.அலாரம் ஒலித்த சில நிமிடங்களிலேயே எஸ்பி அலுவலகத்துக்கும் போன் சென்று விடுவதால் அங்குள்ள போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்க்கும் நேரங்களில் தெரியாமல் கை பட்டு அலாரம் ஒலித்து விட்டதாக கூறப்படுவதாக போலீசார் கூறுகின்றனர்.

Tags : banks ,area ,Thanthonimalai ,
× RELATED தாந்தோணிமலை அரசு குடியிருப்பு பகுதியில் இடிந்த நிலையில் நாடக மேடை