×

ஜீப் எரிந்து சாம்பல்

கரூர், பிப். 7: திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஜீப் ஒன்றில் டிரைவர் மற்றும் 2 ஊழியர்கள் பணி நிமித்தமாக கரூர் வந்தனர். பின்னர் மீண்டும் ஜீப்பில் திருச்சிக்கு சென்றனர்.கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சித்தலவாய் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஜீப்பிலிருந்து திடீரென புகை வந்தது.இதையடுத்து ஜீப்பில் சென்ற 3 பேரும் கீழே இறங்கி நின்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஜீப் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்து குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Tags : Jeep ,
× RELATED ராமநாதபுரம் அருகே போலீஸ் ஜீப் மோதி நடந்து சென்ற பெண் உயிரிழப்பு