×

வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு தரகம்பட்டியில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்

கடவூர், பிப். 7: தரகம்பட்டியில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் செயற்குழு கூட்டம் நடந்தது.வட்டார தலைவர் சிவசாமி தலைமை வகித்தார். வட்ட செயலாளர் மோகன் வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர் ஜான்சன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஐயப்பன் ஆகியோர் பேசினர்.கூட்டத்தில் மாணவர்களின் நலன் கருதி 5 மற்றும் 8ம் வகுப்பு தேர்வை ரத்து செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது. கடவூர் வட்டார கல்வி அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு பணப்பயன் வழங்கியதற்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நிர்வாகிகள் பொன்னுச்சாமி, பாலசுப்பிரமணியன், முருகானந்தம், முருகேசன், சுப்பிரமணியன், பழனிச்சாமி, குழந்தைராஜ், ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வட்டார பொருளாளர் முனியப்பன் நன்றி கூறினார்.

Tags : Tamil Nadu Primary School Teachers Alliance Executive Committee Meeting ,
× RELATED குறுவை சாகுபடி பொய்த்து போனதால் சோளம் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்