×

வள்ளலார் நினைவு தினம் நாளை டாஸ்மாக் கடைகள் அடைப்பு

விருதுநகர், பிப். 7: வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை டாஸ்மாக் மது கடைகள் அடைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விருதுநகர் கலெக்டர் கண்ணன் தகவல்: வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு (பிப்.8) மாவட்டத்தில் செயல்படும் அனைத்து டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள், அனைத்து எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏஏ, எப்.எல்.4ஏ உரிமத் தலங்கள் உள்ள மதுக்கூடங்களில் நாளை விற்பனை செய்ய கூடாது. மீறி செயல்படும் கடைகள் உரிமவிதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

Tags : Valallar Memorial Day ,
× RELATED வள்ளலார் நினைவு தினம் நாளை டாஸ்மாக் கடைகள் அடைப்பு