×

திருச்சுழி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 பேர் பலி

திருச்சுழி, பிப். 6: திருச்சுழியை சேர்ந்தவர் பழனி (50). இவரும், புலிக்குறிச்சியை சேர்ந்த பாக்கியம் என்பவரும் தற்காலிகமாக திருச்சுழியில் வசித்து வருகின்றனர். இருவரும் இருசக்கர வாகனத்தில் விவசாய பணிகளுக்காக வேலையாட்களை அழைப்பதற்கு கேத்தநாயக்கன்பட்டிக்கு சென்றுள்ளனர். அப்போது நரிக்குடி பகுதியிலிருந்து திருச்சுழிக்கு அடையாளம் தெரியாத லாரி இவர்கள் மீது மோதியது. இதில் பழனி சம்பவயிடத்திலே ரத்த வெள்ளத்தில் பலியானார். திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு பாக்கியத்தை 108 ஆம்புலன்ஸ்சில் கொண்டு செல்லும்போது பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : vehicle crashes ,Tiruchi ,
× RELATED ஏப்.14-ல் நடைபெறவிருந்த திருச்சி...