×

நாட்டரசன்கோட்டை மக்கள் பாதிப்பு இளையான்குடி பகுதியில் புளி விளைச்சல் அமோகம்

இளையான்குடி, பிப்.7: இளையான்குடி பகுதியில் கடந்த மாதத்தில் பெய்த லேசான மழையால், புளிய மரங்கள் நல்ல விளைச்சல் கண்டுள்ளது.இளையான்குடி பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக மழை ஏமாற்றியதால், புளிய மரங்களில் பூக்கள் பூக்காமல், காய்கள் காய்காமல் புளி விளைச்சல் கடுமையாக பாதிப்படைந்தது. ஆனால் இளையான்குடி பகுதியில் கடந்த மாதத்திற்கு முன் பெய்த லேசான மழைக்கு புளிய மரங்கள் அனைத்தும் பூக்கள் பூத்து, தற்போது காய்கள் அதிகளவில் இறங்கியுள்ளது. கடந்த மாதத்தில் ஒரு கிலோ புளி ரூ.100லிருந்து ரூ.130 வரை விற்பனை செய்யப்பட்டது. புளி அறுவடை செய்த பின்னர், வரத்து அதிகரிப்பதால் கடைகளில் ரூ.80 வரை விலை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதுமொழி தமிழ் என முழக்கமிட்டவர்‘தமிழ் எங்கள் மூச்சு...’ என்று எத்தனையோ பேர் முழக்கமிடலாம். ஆனால், ஒரு சிலர் தப்பித்தவறி கூட தமிழை தவிர வேறு மொழியை பேச மாட்டார்கள். தான் மட்டுமல்ல... தனக்கு முன் பேசுபவரையும் கூட, அப்படி பேசக்கூடாது என கூறியவர். உலக முதுமொழி எம் தமிழ்மொழி என முழக்கமிட்டவருக்குத்தான் இன்று பிறந்தநாள். ஆம்... அவர்தான் தேவநேய பாவாணர்.

அவரைப்பற்றி அறிவோமா? சங்கரன்கோவில் அருகே கோமதிமுத்துபுரத்தில், 1902, பிப்.7ம் தேதி, ஞானமுத்து - பரிபூரணம் தம்பதிக்கு மகனாக பிறந்தவர் தேவநேசன். இவரே பின்னர் தேவநேயப் பாவாணர் என அழைக்கப்பட்டார். இளம் வயதிலேயே பெற்றோரை இழந்த நிலையில், சகோதரி வசித்து வந்த ஆம்பூரில் பள்ளிக்கல்வியை பயின்றார். பள்ளி காலத்திலேயே தமிழ் மீது இவருக்கு தீராப்பற்று ஏற்பட்டது. இந்த ஆர்வமே அவரை தமிழாசிரியராக உயர்த்தியது. சீயோன்மலையிலும், ஆம்பூரிலும் தமிழாசிரியராக பணியாற்றினார். 1924ல் மதுரை தமிழ்ச் சங்கம் நடத்திய பண்டிதர் தேர்வில் பாவாணர் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. முதலில் எஸ்தர் என்பவரை திருமணம் செய்தார். அவர் இறந்ததும் நேசமணி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார். 1950ல் சேலம் கல்லூரி ஒன்றில் பணியாற்றியபோதுதான், தமிழ் ஆராய்ச்சி நூல்களை எழுதத்தொடங்கினார். உயர்தர கட்டுரை இலக்கணம், ஒப்பியன் மொழிநூல், முதல் தாய்மொழி, திராவிடத்தாய், தமிழ்நாட்டு விளையாட்டு உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்.

பாவாணர் வாழ்ந்த காலத்தில் விடுதலை வேட்கை, நாடு முழுக்க பற்றி எரிந்தபோது இவர் மனதில் உருவானதுதான் `மொழி விடுதலை.’ தமிழின் தொன்மையை அறிந்த பாவாணர், அதைச் சூழ்ந்திருக்கும் சம்ஸ்கிருதத்திலிருந்து தமிழ் விடுதலை பெறுவதே தமிழின் மேன்மைக்கு வழிவகுக்கும் என உணர்ந்தார். அதை முன்னெடுக்கவே தமிழ் மொழி குறித்தும் அதன் சிறப்புகள் குறித்தும் `தமிழே மற்ற மொழிகளுக்குத் தாய்’ என்றுணர்த்தும் கட்டுரைகளையும் நூல்களையும் தொடர்ந்து எழுதினார். வடமொழியிலிருந்து பிறந்தது தமிழ் என்று பரப்பப்பட்ட கருத்தைக் கடுமையாகச் சாடினார். 1981ல் மதுரையில் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றது. அதில், ‘மாந்தன் தோற்றமும்... தமிழர் மரபும்’ என்ற தலைப்பில், சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக சொற்பொழிவாற்றினார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பாவாணரை பொறுத்தவரை நள்ளிரவு 12 மணி வரை மொழி ஆய்வு தொடர்பாக பணியில் ஈடுபட்டிருப்பார். மறுநாள் அதிகாலை 5 மணிக்கு எழுவார். தமிழை உயிரை விட உயர்வாக நேசித்தாலும், ஆங்கிலத்திலும் அசத்தலாக பேசுவார் பாவாணர். ஆனால், எதிரே நிற்பவரை பொறுத்தது அது. தமிழ் மொழியை அறவே தெரியாதவரிடம் மட்டுமே ஆங்கிலத்தில் பேசுவார். இது அவரை மற்றவரிடமிருந்து வித்தியாசப்படுத்தி காட்டியது என்றால் மிகையல்ல.
‘‘வடமொழியினின்று தமிழை மீட்பதே என் வாழ்க்கையின் குறிக்கோள்’’ என்ற  கொள்கையைத் தம் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்து வந்தார் பாவாணர். அகரமுதலிகளைத் தொகுப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். வாழ்நாள் இறுதிவரை தமிழுக்காகவே பாடுபட்டார் பாவாணர்.

Tags : village population ,
× RELATED சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர்...