×

இன்று தேவநேயபாவாணர் பிறந்தநாள் ஒன்றிய அலுவலகத்தில் வெயில், மழையில் வீணாகும் கம்பிகள்

காளையார்கோவில், பிப்.7: காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பயனாளிகள் மற்றும் அலுவலகப் பணிக்காக கொண்டுவரப்பட்ட சென்ட்ரிங் கம்பிகள் துருப்பிடித்து வீணாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொதுமக்களுக்கு வாங்கப்படும் இலவச வீட்டிற்கு கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தப்படும் கம்பிகள் சில வருடங்களுக்கு முன்னாள் காளையார்கோவில் ஒன்றிய அலுவலக வளாகத்தில் இறக்கப்பட்டது. கம்பிகள் அனைத்தும் பாதுகாக்கப்படாமல் வெயில் மற்றும் மழையில் துருப்பிடித்து வீணாகி வருகின்றன.இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், துருபிடித்த கம்பிகளை பயனாளிகளுக்கு வழங்குவதால் மேற்கூரை உறுதித் தன்மை இழந்து பெரிதும் பாதிப்படைகிறது. இதனால் சில காலங்களிளே மேற்கூரை இடிந்து விழுந்து பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படும். அத்துடன் அலுவலகத்தைச் சுற்றிலும் கம்பிகள் மற்றும் தகரக்கதவுகளை வீணாக போட்டு வைத்துள்ளனர். இவற்றை செட் அமைத்துப் பாதுகாப்பான முறையில் வைக்கவேண்டும். மேலும் அலுவலகத்தைச் சுற்றிலும் மற்றும் செல்லும் வழிகளில் புதர் மண்டிகிடப்பதால் விஷப்பூச்சிகள் தங்கும் இடமாகவும் உள்ளது, எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Tags : Devanayavanavar ,
× RELATED சிவகங்கையில் செயல்படும் அரசு மகளிர்...