×

அடிக்கடி விபத்து நடப்பதால் மலட்டாறு முக்கு ரோட்டில் வேகத்தடை அமைக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்

சாயல்குடி, பிப்.7:  கிழக்கு கடற்கரை சாலை வழித்தடத்தில் உள்ள கடலாடி மலட்டாறு முக்குரோட்டில் விபத்துகளை தடுக்க தடுப்புகளை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். தூத்துக்குடி-நாகப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலை ராமநாதபுரம் மாவட்டம் வழியாக செல்கிறது. சாயல்குடி முதல் ராமநாதபுரம் வரையிலான சாலையின் முக்கிய இடமாக கடலாடி மலட்டாறு முக்குரோடு உள்ளது. இங்குள்ள பேருந்து நிறுத்தத்திற்கு கடலாடி சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள், மாணவர்கள், அலுவலர்கள் வந்து செல்கின்றனர். அருகே மாரியூர் கடற்கரை மற்றும் பழமையான சிவன்கோயில் உள்ளதால் அதிகளவில் பக்தர்களும் வந்து செல்கின்றனர். இச்சாலையில் பல்வேறு வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளும், ஆன்மீக யாத்தீரிகர்களும் ராமேஸ்வரம், திருப்புல்லானி, தேவிபட்டிணம், திருஉத்திரகோசமங்கை, ஏர்வாடி போன்ற ஆன்மீக ஸ்தலங்களுக்கு வந்து செல்கின்றனர்.

இதனைப் போன்று திருச்செந்தூர், கன்னியாகுமரி, குற்றாலம், சபரிமலை செல்வதற்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வந்து செல்கின்றனர். மேலும் வாலிநோக்கம் அரசு உப்பளம், ராமேஸ்வரம், மண்டபம் மற்றும் சாயல்குடி கடற்கரை பகுதிகளிலிருந்து மீன்களும், கடலாடி பகுதியிலிருந்து மரக்கரிகள், பனை மரபொருட்கள் போன்ற பொருட்களை ஏற்றிக்கொண்டு வாகனங்கள் பிற மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் செல்கிறது. இதனைப் போன்று அதிகமான கனரன வாகனங்கள், அரசு பேருந்துகள், பள்ளி, கல்லூரி பேருந்துகள் என வாகனங்களால் இச்சாலையில் போக்குவரத்து அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆனால் மலட்டாறு முக்குரோட்டில் வேகத்தடையோ, இரும்பு தடுப்புகளோ இல்லாததால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. இதனால் உயிர்பலி அதிகரித்து செல்கிறது. எனவே மலட்டாறு முக்குரோட்டில் தடுப்புகள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : public ,accidents ,Malakkadu Mukku Road ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...