×

கமுதியில் போலி நகையை கொடுத்து பணம் பறித்த பெண்கள்

கமுதி, பிப்.7:  கமுதியில் போலி நகைகளை கொடுத்து பணம் பறித்த பெண்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கமுதியில் நேற்று முன்தினம் வாரச்சந்தை நடைபெற்றது. சுற்றுவட்டாரகிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கமுதி வந்து காய்கறிகள் மற்றும் தேவையான பலசரக்குகள் வாங்கி சென்றனர். நெரிசல் மிகுந்த பேருந்து நிலைய பகுதியில் கமுதி அருகே சேகநாதபுரம் என்ற ஊரைச் சேர்ந்த பிரபு மனைவி ராமு(35) பலசரக்கு பொருட்களை வாங்கி விட்டு ஊருக்கு செல்வதற்காக நின்றிருந்தார். அப்போது அறிமுகம் இல்லாத 2 பெண்கள் அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும், தனியார் நிதி நிறுவனத்தில் நகையை வைத்து பணம் வாங்க தங்களது அடையாள அட்டையை எடுத்து வரவில்லை. அதனால் உங்களது அடையாள அட்டையை வைத்து உங்கள் நகையை அடமானம் வைத்து பணம் கொடுங்கள். பணத்திற்கு பதில் எங்கள் நகையை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். பணத்தை கொடுத்து விட்டு எங்கள் நகையை வாங்கிக் கொள்கிறோம் என்று கூறியுள்ளனார். இதை நம்பிய ராமு தனது நகையை அடகு வைத்து ரூ.25 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார். நகைகளை அந்த பெண்கள் கொடுத்துள்ளனர். பின்னர் வீட்டிற்கு சென்று பார்த்த போது அந்த பெண்கள் கொடுத்த நகைகள் போலி நகைகள் என்று தெரிந்தது. இதுகுறித்து கமுதி காவல் நிலையத்தில் ராமு புகார் அளித்தார். பேருந்து நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமிரா மூலம் ஆய்வு செய்து  போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : Women ,jewelery ,
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...