×

மேலூர், உசிலம்பட்டி, டி.கல்லுப்பட்டியில் மத்திய அரசை கண்டித்து சிஐடியுவினர் ஆர்ப்பாட்டம்

மேலூர், பிப். 7: எல்ஐசி தனியார் மயம், பிஎஸ்என்எல் தனியார் மயம், ரயில்வே தனியார் மயம் என கார்ப்ரேட்களுக்கு சேவகம் பண்ணும் மோடி அரசின் அநியாய பட்ஜெட்டை கண்டித்து மதுரை மாவட்டத்தில் நேற்று அரசு போக்குவரத்து கழக சிஐடியு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
*மேலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சிஐடியு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய சங்க நிர்வாகி ரவிச்சந்திரன் தலைமையில், ஏராளமான தொழிலாளர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
*உசிலம்பட்டி அரசு போக்குவரத்து கழக மனை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியூ மாநில துணை செயலாளர் சிவக்குமார் தலைமை வகிக்க, உதவி செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் பகத்சிங் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்கி கார்ப்பரேட்டு முதலாளிகளுக்கு சேவகனாக செயல்படுகிறது. மாதாந்திர சம்பளதாரர்களுக்கு வருமானவரி கழிவு அகற்றம், கார்ப்பரேட்டு முதலாளிகள் புதிய தொழில் துவங்க 15 சதவீதம் குறைப்பு என ஒட்டுமொத்த அரசு தொழிலாளிகளை நசுக்கும் விதமாகவுள்ள பட்ஜெட்டை கண்டித்து கோஷமிட்டனர்.
*டி.கல்லுப்பட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு அமைப்பினர், போக்குவரத்து தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : protest ,CITU ,government ,Usilampatti ,Melur ,
× RELATED குஷ்புவின் உருவ படத்தை எரித்து திமுக...