×

காங்கயம் கிராம பகுதிகளில் கொட்டப்படும் கேரள கழிவுகளால் அவதி

காங்கயம், பிப்.7:காங்கயம் கிராமப் பகுதியில் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்டு கொட்டப்படும் கழிவுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காங்கயம் தாலுகா வட்டமலை கிராமம், அவனாசிபாளையம் புதூர், அண்ணாமலை கிரஷர் அருகே பல்வேறு கழிவுகள் கொண்டு வரப்பட்டு கொட்டப்பட்டுகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் இப்பகுதிகளில் கேரள கழிவுகள் மற்றும் நூற்பாலை கழிவு பஞ்சுகள் கொட்டுவது வாடிக்கை ஆகிவிட்டது. ஏற்கனவே, கேரளாவில் இருந்து ஏராளமான கழிவுகளை கொட்டிவிட்டு சென்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அதேபோல பஞ்சு கழிவுகளை கொட்டி உள்ளனர். இதனால், அப் பகுதி குப்பைமயமாக உள்ளது. குப்பைகளை கொட்டும் நபர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கழிவுகளை அப்புறப்படுத்தி கொடுக்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திற்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kerala ,Kankayam ,areas ,
× RELATED கேரளாவில் கொரோனா வேகமாக பரவுகிறது:...