×

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சிவன்மலை முருகன் கோயிலில் நாளை தேரோட்டம்

காங்கயம், பிப்.7: தைப்பூச திருவிழாவை முன்னிட்டு காங்கயம் அடுத்துள்ள சிவன்மலை முருகன் கோயிலில் நாளை (8ம் தேதி) தேரோட்டம் நடக்கிறது. இதற்காக தேர் அலங்கரிக்கும் பணி நடந்து வருகிறது. சிவன்மலை முருகன் கோயிலில் தைப்பூச தேர்த் திருவிழா மலை அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோயில் கொடியேற்றத்துடன் கடந்த ஜன.30ம் தேதி துவங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு சுவாமி மலையை வலம் வரும் திருத்தேர், கடந்த வாரத்தில் இருந்து அலங்கரிக்கும் பணி நடந்து வருகிறது. பணிகள் அனைத்தும் முடியும் நிலையில் உள்ளது. தேர் நாளை மாலை 4 மணிக்கு அமைச்சர், இந்து சமய அறநிலைய துறையினர், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர். திருத்தேர் மூன்றாம் நாள் மலையை வலம்
வந்து தேர்நிலை அடைகிறது. தேரோட்டத்திற்காக தேர் அலங்கரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Tags : Sivanmalai Murugan Temple ,
× RELATED கொரோனா வைரஸ் பீதி சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடியது