×

உடுமலை பேருந்து நிலையத்தில் டைமிங் பிரச்னையால் தகராறு

உடுமலை, பிப்.7: உடுமலை பேருந்து நிலையத்துக்கு தினமும் ஏராளமான பேருந்துகள் வந்து செல்கின்றன. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் புறப்படும் நேரம் தொடர்பாக அடிக்கடி, டிரைவர்களுக்கு இடையே தகராறு ஏற்படுகிறது. இதனால், பேருந்துகள் ஒன்றையொன்று முந்திக்கொண்டு நுழைவுவாயிலை நோக்கி செல்கின்றன. இதனால், இரு பேருந்துகளும் இடித்துக்கொள்ளும் நிலை ஏற்படுகிறது. இதன்காரணமாக, பயணிகள் அச்சப்படுகின்றனர்.அடிக்கடி இந்த பிரச்சினை நடக்கிறது. நேற்று முன்தினம் மாலை தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதனால், அங்கு சுமார் 1 மணி நேரம் பரபரப்பு நிலவியது. மற்ற பேருந்துகளும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.பேருந்து நிலையத்தில் கண்காணிப்பில் உள்ள போக்குவரத்து போலீசார் இதை கண்காணித்து, உரிய நேரத்தில் அனைத்து பேருந்துகளும் சீராக புறப்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Dispute ,bus station ,Udumalai ,
× RELATED முன்விரோத தகராறில் இருவருக்கு சரமாரி வெட்டு