×

ஊட்டி - முதுமலை சாலையில் கல்லட்டி மலைப்பாதையில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி துவக்கம்

ஊட்டி, பிப். 7: ஊட்டியில் இருந்து முதுமலை செல்லும் சாலையில் கல்லட்டி மலைப்பாதையில் காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்க சாலையோரங்களில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.  நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் மசினகுடி பகுதிக்கு செல்கின்றனர். அதேேபால், அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் கல்லட்டி, மசினகுடி, முதுமலை சாலையையே பயன்படுத்துகின்றனர். இதில் கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் 99 சதவீதம் பேர் இப்பாதையையே பயன்படுத்துகின்றனர். இப்பாதை வழிேய வரும் சுற்றுலா பயணிகள் மலைப் பாதையில் ஆங்காங்கே நின்று புகைப்படங்களை எடுக்கின்றனர். சிலர் வாகனங்களை நிறுத்தி புகைப்பிடிப்பது மற்றும் உணவு உட்கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதுபோன்ற சமயங்களில் சாலையோரங்களில் உள்ள காய்ந்த செடி, கொடிகள் மற்றும் புற்கள் மீது தீப்பொறிகள் பட்டு, அது பெரிய அளவிலான காட்டுத்தீயை ஏற்படுத்தி விடுகிறது. தற்போது பனிப்பொழிவால், ஊட்டி - முதுமலை சாலையில் கல்லட்டி மலைப் பாதையில் சாலையோரங்களில் உள்ள புற்கள் மற்றும் செடி, கொடிகள் காய்ந்து போய் காட்சியளிக்கிறது. இதனால், சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டுநர்களால் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், கோடை சீசன் நெருங்குவதாலும், அதேபோல் பொக்காபுரம் கோயில் திருவிழாவிற்கு ஏராளமான பக்தர்கள் செல்லும் நிலையில், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கல்லட்டி மலைப்பாதையில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags : Commencement ,hill ,Ooty - Mullamalai ,Kallati ,road ,
× RELATED நெல்லையப்பர் கோயிலில் இன்று...