×

பொது தேர்வுகள் நெருங்குவதால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது

ஊட்டி, பிப். 7: 12ம், 10ம் வகுப்பு பொது தேர்வுகள் நெருங்கிய நிலையில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.  தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஓரிரு நாட்களில் செயற்முறை தேர்வுகள்  துவங்கவுள்ளது. அடுத்த மாதம் 2ம் தேதிக்கு மேல் பொது தேர்வுகள் துவங்குகிறது. 12 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு துவங்கவுள்ள நிலையில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. வழக்கத்தை காட்டிலும் தாவரவியல் பூங்கா, படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி மற்றும் படகு இல்லம் போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்து காணப்பட்டது.

Tags : Tourist arrivals ,
× RELATED கொரோனா பீதியால் வெறிச்சோடிய...