×

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொடக்குறிச்சியில் கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா

மொடக்குறிச்சி, பிப்.7: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொடக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தாலுகாவிற்கு உட்பட்ட 40 கிராம நிர்வாக அலுவலர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந் நிலையில், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஊதிய உயர்வு கடந்த ஏழு மாதமாக வழங்கப்படவில்லை. அதேபோல், இரண்டு வகையான அகவிலைப்படி ஓராண்டாக வழங்கவில்லை.பணிப்பதிவேடுகள் சரியான முறையில் பராமரிக்காததால் கருவூலத்தில் சம்பளம் வழங்கப்பட்டதாகவும், ஆனால் பதிவேட்டில் சம்பளம் வழங்கப்படவில்லை எனவும், மாதந்தோறும் வழங்கப்படும் சம்பளம் காலதாமதமாக வழங்கப்படுவது ஆகியவற்றை கண்டித்து நேற்று கிராம நிர்வாக அலுவலர்கள் மொடக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத் தலைவர் சண்முகம், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்டத் தலைவர் மோகன்ராஜ், மாவட்ட தலைவர் செந்தில்குமார், அழகேசன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டனர்.

Tags : Darna ,village ,Modakurichi ,
× RELATED மருத்துவ கல்லூரி ஊழியர்கள் தர்ணா