×

பதவி உயர்வு வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, பிப்.7: பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைமையிட செயலாளர் வசந்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராமசாமி, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பட்டதாரிகள் ஆசிரியர் கழக மாவட்ட பொருளாளர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் பிரகாசம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.  இதில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மாநகராட்சி, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரியராக உட்படுத்த வேண்டும். அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 4 ஆண்டுகளாக வழங்காமல் உள்ள பதவி உயர்வினை உடனடியாக வழங்க வேண்டும்.

ஏழை, எளிய மாணவர்களின் கல்வி கற்பித்தலில் உள்ள சிக்கல் நிறைந்த தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை 2019ஐ திரும்ப பெற வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு பொதுத்தேர்வு அறைக்கண்காணிப்பு பணியில் 6,7,8ம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி முற்றிலுமாக விலக்களிக்க வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்டங்களில் வழங்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : teachers ,
× RELATED பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம்