×

இடைகால் குளோபல் பப்ளிக் பள்ளியில் மாணவர் சேர்க்கை

கடையநல்லூர், பிப்.7:  கடையநல்லூரை அடுத்த இடைகால் குளோபல் பப்ளிக் ஸ்கூல் சிபிஎஸ்சி பள்ளியில் 2020-21ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை இன்று (7ம்தேதி) முதல் துவங்குகிறது.இதுகுறித்து பள்ளியின் தாளாளர் கூறியதாவது, இடைகால்- சேர்ந்தமரம் ரோடு சாலையில் அமைந்துள்ள குளோபல் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி வரும் ஜூன் மாதம் முதல் செயல்படுகிறது. இதற்காக இன்று (7ம்தேதி) முதல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தினமும் பிரிகேஜி முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடக்கிறது. அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய காற்றோட்டமான வகுப்பறைகள், தகுதியும் திறமையும் வாய்ந்த ஆசிரியர்கள், ஸ்மார்ட் வகுப்பறையில் கல்வி கற்பிக்கும் முறை, ஒன்றாம் முதல் 5ம் வகுப்பு வரை இலவச அடித்தள சிறப்பு வகுப்புகள், 6 முதல் 8ம் வகுப்பு வரை நீட் மற்றும் ஜீ அடிப்படையிலான சிறப்பு வகுப்புகள், விளையாட்டரங்கம்,  மாணவிகளின் பாதுகாப்பு கருதி அதிகளவில் பெண் ஆசிரியர்களை கொண்டு கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறது. பள்ளியின் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுகிறது. ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனங்கள் இயக்கப்படுகிறது. மற்ற சிபிஎஸ்இ பள்ளிகளை விட குறைவான கல்விக்கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறினார். மாணவர்களின் உடல் திறனையும், விளையாட்டு திறமைகளையும் வளர்க்கும் வகையில் குதிரையேற்றம், தடகள ஓட்டப்பந்தய மைதானம், கூடைப்பந்து மற்றும் கால்பந்து மைதானம் அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Idukal Global Public School ,
× RELATED தனியார் பள்ளிகளில் முன்கூட்டியே...